அரசியல் ரீதியான பிளவுகளுக்கு அப்பால், அமெரிக்க வரி நடவடிக்கைகளால் எழும்
சவால்களுக்கு இலங்கை ஒரு தேசமாக பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
காலியில் இன்று(07.04.2025) நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர் இந்த வலியுறுத்தலை
விடுத்துள்ளார்.
உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் தற்போது ஒரு சாதகமற்ற சூழ்நிலை உள்ளது.
இதன்படி, இலங்கையின் ஏற்றுமதியைப் பாதிக்கும் சில முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளன.
தீவிரமான விவாதங்கள்
இந்த விடயத்தைத் தீர்க்க, அரசாங்கம் தீவிரமாக விவாதங்களில்
ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நிலைமை எதிர்பாராதது என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியில்
சிக்காமல் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதை அரசாங்கம் திட்டமிட்டு
வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.