நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒருகாலத்தில் படுபிஸியாக படங்களில் நடித்து கொண்டிருந்தவர். ஆனால் சமீபத்தில் சில வருடங்களாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில் அவர் பிரபாஸ் உடன் நடித்த பாகுபலி படம் வெளியாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நேற்று பார்ட்டி நடத்தப்பட்டது. அதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வராத அனுஷ்கா
ஆனால் அனுஷ்கா மட்டும் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவர் ஏன் வரவில்லை என்கிற காரணம் தான் தெலுங்கு மீடியாக்களில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அனுஷ்கா கடந்த சில வருடங்களாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பதால் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்து வருகிறார்.
மேலும் அவரது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி என்றாலும் மிக முக்கிய நிகழ்ச்சி என்றால் மட்டுமே வருவேன் என தயாரிப்பாளரிடம் கூறிவிடுகிறாராம். தனது போட்டோக்கள் வந்தால் இணையத்தில் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்பதால் தான் அவர் தற்போது வெளியில் எங்குமே செல்வதில்லையாம்.
அந்த காரணத்தால் தான் பாகுபலி பார்ட்டியில் கூட அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.


