நடிகர் அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இருக்கும் வழக்கத்தை மாற்றி தனக்கு தோன்றிய நல்வழியில் பயணிப்பவர்.
இந்த வருடம் அவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் வெளியானது, அதில் குட் பேட அக்லி செம சூப்பர் டூப்பர் ஹிட்.
அடுத்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே தனது அடுத்த படத்தை நடிக்க உள்ளார்.
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?
இயக்குனர் பேட்டி
இந்த நிலையில் அஜித்தை வைத்து தீனா என்ற மாஸ் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது, நான் துணை இயக்குனராக பணியாற்றிய போது ஒரு படத்திற்காக ஆம்புலன்ஸ் வந்து டப்பிங் செய்துகொடுத்துவிட்டு சென்றார்.
அந்த விபத்திற்கு பிறகு நிறைய ஆபரேஷன் நடந்தது அல்லவா, அப்போது ஒரு முறை ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் செய்தார். தனது 24, 25 வயதிலேயே பாதி சம்பளம் வாங்கி நடித்துள்ளார், புதிய இயக்குனர்களுக்கு பைக், கார் கொடுத்துள்ளார்.
அவர் கண் ஆபரேஷனுக்கு செய்த உதவி எல்லாம் எவ்வளவு தெரியுமா?, அவர் கூற மாட்டார் ஆனால் எங்களுக்கு தெரியும். அஜித் போன்ற வில்பவர் எல்லாம் சொல்லவே முடியாது என பெருமையாக பேசியுள்ளார்.