காசா (gaza)பகுதியின் எதிர்காலம் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(donald trump) அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஏழு அரபு நாடுகளின் தலைவர்கள் சவுதி(saudi arabia) அரேபியாவின் ரியாத்தில் ஒன்றுகூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்டை நாடுகளில் பாலஸ்தீனியர்களைக் குடியேற்றுவதன் மூலம் காசா பகுதியை ஆக்கிரமிக்கும் அமெரிக்க திட்டத்தை நிராகரிப்பதற்காக சமீபத்திய கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அரபுத் தலைவர்கள் காசா பகுதியில் பாலஸ்தீன அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அரபுத்தலைவர்கள்
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யான், குவைத் அமீர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா மற்றும் பஹ்ரைன் பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமத் அல்-கலீஃபா ஆகியோர் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் 4 ஆம் திகதி எகிப்தின் கெய்ரோவில் நடைபெறும் அரபு லீக் கூட்டத்தில் விவாதத்தின் முடிவுகள் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.