விஜய் டிவியின் பிரபல காமெடி பேச்சாளர் அறந்தாங்கி நிஷா சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு வருகிறார்.
அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சொந்தமாக வீடு
அறந்தாங்கி நிஷா சென்னைக்கு வந்த புதிதில் வாடகை வீடு தேடும்போது ஆர்ட்டிஸ்ட் என்றால் தரமாட்டேன் என்றார்களாம். அதன் பின் முஸ்லீம் என்றால் வீடு தரமாட்டேன் என கூறுவர்களாம்.
அதனால் தற்போது சொந்தமாகவே ஒரு வீட்டை சென்னையில் வாங்கி இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. அதன் புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.
இது பெரிய பங்களா எல்லாம் இல்லை, 1 BHK வீடு தான் எனவும் அவர் கூறியுள்ளார்.