ஒரு சுயேட்சைக் குழு உறுப்பினர் கதைப்பது உங்களுடைய அரசாங்கத்திற்கே அச்சத்தை ஏற்படுத்துகின்றது என்றால் அவமானம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ் மாவட்டத்திற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுத்ததால் தான் நாடாளுமன்றத்தில் எட்டு நாட்கள் நான் கதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிமல் ரத்நாயக்கவின் கருத்து
நான் கதைக்காத விடயங்களை கதைத்ததாக நாடாளுமன்றத்தில் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) சொல்லியுள்ளார். நாடாளுமன்றத்தில் என்னையும் கதைக்க விட மாட்டீர்கள், நீங்களும் கதைக்க மாட்டீர்கள்.” என தெரிவித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தின் போது ஆளுந் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அர்ச்சுனாவிற்கும் இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குவாதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூரத்தி (Rajeewan Jayachandramurthy) தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீபவானந்தராஜா, இளங்குமரன், அர்ச்சுனா ஆகியோரும் பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் பணி நிலை மட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
https://www.youtube.com/embed/pB5hy4NwRAs

