தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் தனது முழு உயிரையும் உடலையும் அர்ப்பணிப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (R.Archchuna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (05.12.2024) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அரசாங்க அதிபர் மற்றும், கிளிநொச்சி (Kilinochchi) அரசாங்க அதிபர் அரசிடம் இருந்து கிடைக்கப்பபெற்ற உதவிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நவம்பர் மாதம் மாவீரர்களின் மாதம்.
எப்போதுமே மாவீரர்களுடைய மாதத்தில் மண்ணை நணைக்கும் மழை எப்போதும் பெய்யும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில், அரசாங்கம் கொடுத்த நிவாரணங்களை விட புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொடுத்த நிதி பல மடங்கு அதிகம்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 159 உறுப்பினர்களுக்கும் என்னால், எனது அறிவால் என்ன உதவி மற்றும் ஆதரவினை வழங்க முடியுமோ அதனை நிச்சயமாக செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் முழுமையான உரையை கீழ் உள்ள காணொளியில் காண்க.
https://www.youtube.com/embed/waI18oQP9HM