கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் நடத்தப்படவிருந்த கடையடைப்பு போராட்டம், இன்றையதினத்திற்கு(18) மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மடு மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதன் காரணமாக சுமந்திரன் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் திருவிழா
எனினும், இந்துக்களின் நல்லூர் திருவிழா இன்னும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கூறிய அர்ச்சுனா, தான் மதவாதம் பேசவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடையடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கே நடைபெறும் என சுமந்திரன் கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் கடைகள் வழமையாகவே திறந்திருக்காது என அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடையடைப்பு போராட்டம் என்பது மக்களால் விருப்பப்பட்டு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

