முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெண்ணின் நடத்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை : விளக்கமளித்த அர்ச்சுனா எம்.பி

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து
நாடாளுமன்றத்தில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ். தேர்தல் திணைக்களத்தில் (17) அர்ச்சுனா கட்டுபணம் செலுத்தினார்.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கை

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உரையின் போது
பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பியிருந்தனர்.

பெண்ணின் நடத்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை : விளக்கமளித்த அர்ச்சுனா எம்.பி | Archuna Mp Comments On The Current Controversy

இதற்கு பதிலளித்த அர்ச்சுனா, “குறித்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள்
என்னிடம் இருக்கின்றன.

இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம், ஒரு இளம் சமுதாயம் அழியும் வகையிலான ஓர் ஆதாரம் என்னிடம் வந்த
காரணத்தினால் ஒரு சமூகப் பொறுப்புடனேயே இதனை நாடாளுமன்றில் பேசினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி 

அத்தோடு, சட்டத்தரணி சுவஸ்திகாவை விமர்சித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்த
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நான் சுவஸ்திகா குறித்து இதுவரை
எந்தக் கருத்தும் நாடாளுமன்றில் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக நாடாளுமன்றில்
உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயத்தை ஹன்சாட்டில் இருந்து
நீக்குமாறு பேசியுள்ளார்.

பெண்ணின் நடத்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை : விளக்கமளித்த அர்ச்சுனா எம்.பி | Archuna Mp Comments On The Current Controversy

நான் குறித்த நபர் தொடர்பாக நாடாளுமன்றத்தில்
பேசவில்லை எனவே நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வேறு யாரேனும் நாடாளுமன்றில் அவர்
குறித்து பேசியிருக்கலாம் என நினைக்கிறேன்.

தவிர சட்டத்தரணி சுவஸ்திகா மீது
தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்