ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (13.09.2024) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழர் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தென்பகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தமிழ் தேசிய கட்சிகளில் இருக்கின்ற ஒரு சிலர் அல்லது தமிழர்கள் முகவர்களாக செயற்படுகின்றார்கள்.
ஆகவே, அந்த முகவர்களாக செயற்படுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்காக நாங்கள் இந்த தேர்தலை நடத்துகின்ற போது அதனை குழப்பும் வகையில் அவர்கள் செயற்பட கூடாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,