ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அதே நேரத்தில் ஹிந்தியில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தையும் அவர் எடுத்து வருகிறார்.
அதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதன் இசையமைப்பாளர் யார் என்பது பற்றி லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது.
இசையமைப்பாளர்
தமிழில் முக்கிய இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்காக ஹிந்தியில் நுழைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஏற்கனவே அனிருத் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்து நல்ல பாப்புலர் ஆகிவிட்ட நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன் நுழைய இருப்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.