முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் அருண் ஹேமச்சந்திரா விசேட கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து முறையான திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதற்கான
நிதியுதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிலைமைகள் குறித்தும் அதன்போது
முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட உயர்மட்ட
கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரனின் ஒழுங்கமைப்பில்
பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண்
ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத்,தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நளீமி உட்பட திணைக்கள
தலைவர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்து நிலையம்

அனர்த்த முகாமைத்து நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் அருண் ஹேமச்சந்திரா விசேட கோரிக்கை | Arun Hemachandra Special Request

இதன்போது கடந்த வெள்ள அனர்த்ததின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்
எதிர்கொள்ளப்பட்ட பாதிப்புகள் அதன்போது முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள்
மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்ட நட்டங்கள், அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து
ஆராயப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும்
விரிவாக ஆராயபட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.