கடந்த வெள்ளிக்கிழமை லெபனான்(lebanon) தலைநகர் பெய்ரூட்டிற்கு தெற்கே இஸ்ரேல்(israel) நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இவ்வாறு ஹிஸ்புல்லா தலைவர் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் எப்படி நடத்தியது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஈரான் நாட்டு உளவாளியின் துல்லியமான தகவல்
இதன்படி ஈரான்(iran) நாட்டைச் சேர்ந்த தமது உளவாளி அளித்த உறுதியான தகவலை வைத்துக் கொண்டே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னதாக ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே மீதான தாக்குதலுக்கும் ஈரானிய உளவாளியே காரணமென தகவல்கள் தெரிவித்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மீதான தாக்குதலுக்கும் ஈரானிய உளவாளியே தகவலை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
கூட்டமொன்றில் பங்கேற்கவுள்ள நஸ்ரல்லா
இதன்படி பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா படைகளின் கட்டளை மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹஸன் நஸ்ரல்லா கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை ஈரானிய உளவாளி இஸ்ரேல் தரப்புக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் ஹிஸ்புல்லா உட்பட முன்னணி தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருப்பதையும் அந்த உளவாளி இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே இஸ்ரேல் இந்த துல்லிய தாக்குதலை நடத்தி நஸ்ரல்லா உட்பட ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை கொன்று குவித்துள்ளது.