அட்லீ – அல்லு அர்ஜுன்
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வருகிறார். இது அட்லீயின் 6வது திரைப்படமாகும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அறிவிப்பும் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. மிகவும் பிரபலமான நடிகர்
அட்லீ இயக்கத்தில் ஸ்ரீலீலா
இந்த நிலையில், அட்லீ விளம்பர படம் ஒன்றை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, விளம்பர படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் அட்லீ.
இந்த விளம்பர படத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலீலா, பாபி தியோல் ஆகியோர் நடிக்கிறார்களாம். அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த இந்த விளம்பர படத்தை ஒரு குறும்படம் போல் திரைப்படத்துக்கு இணையாக பிரம்மாண்டமாக படமாக்குகிறாராம் அட்லி என கூறப்படுகிறது.