விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.
தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
விஜய்யின் த.வெ.க.வில் இணையும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் தீபா, சரவணன், ரோஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், இயக்குநர் அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அட்லீயின் ஏ பார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்க உள்ளார் என்றும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் இரண்டாம் வாரம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.