கீர்த்தி சுரேஷ் தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் ஆக இருக்கிறார். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்துவிட்டார் கீர்த்தி.
பல்வேறு இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் துபாயில் பேபி ஜான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் படக்குழு மற்றும் படத்தை தயாரித்த அட்லீ உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.
என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க..
துபாயில் நடந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லீ இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அட்லீ போனில் கிளிக் செய்திருக்கிறார்.
ஆனால் கடைசியில் அது போட்டோ இல்லை வீடியோ என அறிந்த கீர்த்தி.. “என்னடா வீடியோ எடுத்து வெச்சிருக்க” என அட்லீயை பார்த்து கேட்டிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#KeerthiSuresh to #Atlee : Ennada Video Eduthu Vechruka..😅pic.twitter.com/oI5G9xeJMB
— Laxmi Kanth (@iammoviebuff007) December 22, 2024