முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணிவண்ணன் தரப்பு மீதான தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில்(Jaffna) தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது
தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு பொலிஸார் கைவிலங்கிட்டுள்ள விடயம் குற்றச்சாட்டுகளாக மாறியுள்ளன.

நீர்வேலி கரந்தன் பகுதியில் வைத்தே நேற்று தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

[CJFGSK5
]

தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரசார பணியில்
ஈடுபட்டிருந்த வேளை முச்சக்கர வண்டியில் நால்வர் கொண்ட வன்முறை கும்பல் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

மணிவண்ணன் தரப்பு மீதான தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டு | Attack On Manivannan S Side

பின்னர் முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் அங்கிருந்து சென்று சுமார் 30
பேருடன் வந்து பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பெண்கள் என இருபாலர்
மீது   தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தற்போது  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தமிழ் மக்கள் கூட்டணியினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி ஊடாக தமிழ்
மக்கள் கூட்டணியினர் அறிவித்த போது , பொறுப்பதிகாரி தான் முறைப்பாட்டை
ஏற்றுக்கொண்டதாக கூறியதாகவும், பின்னர் சிரேஸ்ட பொலிஸ்
அத்தியட்சகரின் அறிவுத்தலின் பிரகாரம் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் சம்பவம்

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு இலக்கான
நபர்களுக்கு பொலிஸார் கைவிலங்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மணிவண்ணன் தரப்பு மீதான தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டு | Attack On Manivannan S Side

அது தொடர்பில் பொலிஸாரிடம் தமிழ் மக்கள் கூட்டணியினர் கேட்ட போது, தமக்கு
மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கு அமையவே கைவிலங்கிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் கடந்துள்ள
நிலையிலும் தாக்குதலாளிகள் எவரையும் கைது செய்யவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு கோப்பாய் பொலிஸ்(kopai police) நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது தாக்குதல் தொடர்பில் தகவல் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், தாக்குதலுக்கு
இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு
கைவிலங்கிட்டுள்ளமை அச்சுறுத்தும் செயற்பாடே என தமிழ் மக்கள்
கூட்டணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.