சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மட்டக்களப்பு மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் (M.S. Naleem) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.