திருகோணமலை – திருக்கடலூர் கடற்றொழிலாளர்களை கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர்
வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து படகுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன் குறித்த
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் வாழைச்சேனை பகுதியை
சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலைதுறை முக பொலிஸார்தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட இளைஞர் அணி
செயலாளர் துறைமுக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய மேலதிக
விடயத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சண்முகம் குகதாசன் நாடாளுமன்றத்தில் வைத்து துறைசார் அமைச்சருடன்
பேசி தீர்க்கமான முடிவை தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கைது நடவடிக்கை
குறித்த மூவரும் கைது செய்து திருகோணமலை துறைமுக பொலிஸ்
நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்
வயது (32,34,38) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில்
தாக்குதலில் படுகாயமடைந்த கடற்றொழிலாளர்களுக்கு நீதி கோரி திருகோணமலையில் வீதி மறியல்
போராட்டம் ஒன்றை திருக்கடலூர் கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் முன்னெடுத்திருந்தனர்.
இச்சம்பவத்தில் கைதான மூன்று சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான்
முன்னிலையில் இன்று முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை துறைமுக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

