அட்டகாசம்
இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அட்டகாசம்.

இப்படத்தில் பூஜா, ரமேஷ் கண்ணா, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். அஜித்தின் திரை வாழ்க்கையில் இப்படமும் மிக முக்கியமான ஒன்றாகும்.

ஆண்பாவம் பொல்லாதது திரை விமர்சனம்
ரீ ரிலீஸ் முன்பதிவு
21 ஆண்டுகள் கழித்து இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இன்று இப்படம் ரீ ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரீ ரிலீஸ் ஆகவிருந்த இப்படத்திற்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் முன்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

