தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டங்களை பயன்படுத்தி தனது பதவிக்காலத்தை ஆறு வருடங்களாக நீட்டிக்க முயற்சிக்கலாம் என வெளியாகி வரும் செய்திகள் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, தமக்கு பின்னர் எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதற்காக, ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்கி நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க நினைக்க வாய்ப்புள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இதன்போது பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,