முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

அரசங்கத்தால் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒழித்து தற்போதைய ஜனாதிபதி இந்த நாட்டை வட கொரியாவாக மாற்றத் தயாராகி வருவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவம்சம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை இழந்து வருவதாகவும், ஜே.வி.பி மக்களை அச்சுறுத்துவதற்காக வீடுகளுக்கு குண்டர்களை அனுப்பி வருவதாகவும் சாகர காரியவம்சம் கூறியுள்ளார்.

அரச சேவை அரசியல்மயமாக்கம்

அத்தோடு, ஜனாதிபதியின் முதல் வரவு செலவுத் திட்டமானது, ஒரு கடதாசியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது என தெரிவித்த அவர் அது யாதார்த்தத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Attempt To Turn Sri Lanka Into North Korea Slpp

அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நாட்டிற்கு புதிய முதலீடுகள் தேவை என்றும், அரசாங்கம் ஏற்கனவே உள்ள முதலீடுகளைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை எனவும் சாகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச சேவையில் உள்ள மூத்த அதிகாரிகளை நிலுவை பதவிகளுக்கு மாற்றுவதன் மூலமும், இளைய அதிகாரிகளை உயர் பதவிகளுக்கு நியமிப்பதன் மூலமும் அரச சேவையை முழுமையாக அரசியல்மயமாக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு செய்த முதல் காரியம், அதன் தேர்தல் மேடையில் இருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளில் உயர் பதவிகளுக்கு நியமித்ததே ஆகும்
என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு | Attempt To Turn Sri Lanka Into North Korea Slpp

அத்தோடு, அவர்கள் சட்டமா அதிபரை அச்சுறுத்தி, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக அவரைப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், சட்டமா அதிபரின் அதிகாரத்தை அகற்றி, ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவ முயற்சிப்பதாகவும் சாகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இன்று நிறைவேற்றப்படாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.