அவதார் Fire And Ash
ஜேம்ஸ் கேமரூன், டைட்டானிக் என்ற படத்தை இயக்கி முதலில் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.
உலக சினிமா ரசிகர்கள் அப்படம் முதல் ஜேம்ஸ் கேமரூன் படைப்புகளை அதிகம் கவனிக்க ஆரம்பித்தார்கள். டைட்டானிக்கில் பிரம்மாண்டத்தை காட்டிய ஜேம்ஸ் கேமரூன் அடுத்து ரசிகர்களை அவதார் மூலம் வியக்க வைத்தார்.
முதல் பாகம், 2ம் பாகம் என தொடர்ந்து அவதார் படங்களில் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட்டார்.

ஓடிடி ரிலீஸ்
கடந்த டிசம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் அவதார் ஃபையர் அண்ட் ஆஷ் என்ற 3வது பாகம் வெளியானது, இந்த படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன.
முதல் நாளில் உலகளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ. 20 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாம்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த படம் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

