அவ்வை ஷண்முகி
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996ம் ஆண்டு தமிழில் வெளியான படம் அவ்வை ஷண்முகி.
கமல், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் என பலர் நடித்துள்ள இப்படம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது.
படத்தில் கிரேஸி மோகனின் திரைக்கதை மிகவும் முக்கியமாக அமைந்தது.
1993ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Mrs Doubtfire என்ற படத்தின் தழுவல் தான் அவ்வை ஷண்முகி, அந்த படத்திற்கும் தமிழ் பதிப்பிற்கு நிறைய மாற்றங்கள் உள்ளன.
லேட்டஸ்ட்
இந்த படத்தில் கமல்-மீனாவின் குழந்தையாக ஆன் அன்ரா நடித்திருந்தார்.
அவ்வை ஷண்முகி பட வெற்றியால் அவருக்க நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.
மாடலிங் மற்றும் தொழிலதிபராக இப்போது இவர் கலக்கி வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக படத்தில் பார்த்த ஆன் அன்ராவின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் அட ஆளே மாறிவிட்டாரே இவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.