அயோத்தி
கடந்த 2023ம் ஆண்டு தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாக வெளிவந்தது அயோத்தி. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் ப்ரீத்தி அஸ்ரனி, யஷ்பால் ஷர்மா, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சென்சிட்டிவான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

அஜித்துக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர் கொடுக்கும் காஸ்ட்லி கிஃப்ட்.. எஸ்.ஜே.சூர்யா உடைத்த விஷயம்
இப்படத்திற்கு பின் இயக்குநர் மந்திரமூர்த்தியின் அடுத்தப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
புதிய படம்
இந்த நிலையில், இயக்குநர் மந்திரமூர்த்தியின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராகவா லாரன்ஸ் அல்லது மாதவன் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இயக்குநர் மந்திரமூர்த்தியின் அடுத்த பட ஹீரோ என தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

