அய்யனார் துணை
விஜய் டிவி என்றாலே முன்பெல்லாம் ரியாலிட்டி ஷோக்கள் தான் முதலில் நியாபகம் வரும். ஆனால் இப்போதெல்லாம் சீரியல்கள் தான் கண்முன்னே வருகிறது.
அந்த அளவிற்கு சீரியல்கள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்கள் விஜய் தொலைக்காட்சி. இதுநாள் வரை விஜய்யில் நம்பர் 1 சீரியலாக இருந்துவந்த சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் கீழே இறங்க முதல் இடத்திற்கு அய்யனார் துணை சீரியல் வந்தது.
நீயெல்லாம் நாயகியா நடிக்க மாட்ட, நீயெல்லாம் Artistஆ.. அய்யனார் துணை நடிகை மதுமிதாவை விமர்சித்த இயக்குனர், யார் அது?
அய்யனார் துணை தொடரில் இந்த வாரம் சேரனுக்கு பெண் பார்க்கும் விஷயங்கள் தான் உள்ளது. அவர் ஜோசியர் சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு வெளியே செல்ல பின் சோழன் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
இந்த எபிசோட் ரசிகர்களையும் மிகவும் எமோஷ்னல் ஆக்கியது என்றே கூறலாம்.
நடிகர் உதவி
தற்போது சேரன் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் முன்னா தீபாவளிக்காக ஒரு விஷயம் செய்துள்ளார்.
அதாவது குழந்தை காப்பகத்தில் இருந்து தீபாவளிக்கு உதவி கேட்க உடனே ரூ. 10 ஆயிரம் உதவியுள்ளார் முன்னா. அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட அனைவரும் சூப்பரான விஷயம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram