அய்யனார் துணை
படங்களில் எப்படி வித்தியாசம் எதிர்ப்பார்க்கிறார்களோ அதேபோல் சீரியல்களிலும் அதிகம் பார்க்கிறார்கள்.
இதனால் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
அப்படி வழக்கமான வில்லி கதை, பொறாமை, குழாயடி சண்டை என இல்லாமல் இளைஞர்கள் ரசித்து பார்க்கும் ஒரு அழகான குடும்ப கதையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.

புரொமோ
இன்றைய எபிசோடில் பாண்டியன், தன்னை விரும்பிய பெண்ணிடம் அண்ணனை திருமணம் செய்துகொள்கிறாயா என கேட்ட விஷயம் தான் ஓடுகிறது.
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், ஒரு புகைப்படத்தை காட்டி பல்லவன், என் அம்மாவுடன் எனக்கு ஒரு போட்டோவும் இல்லை, இந்த நபருடன் ஏன் இருக்கிறது என தனது அப்பாவிடம் கேட்கிறார்.

அதற்கு அவர் நீ உன் அம்மாவுடன் புகைப்படம் எடுக்காமல் யாருடன் எடுப்பாய் என்ற உண்மையை கூறுகிறார். இந்த புரொமோவை கண்ட ரசிகர்கள் இது என்ன பயங்கர டுவிஸ்ட்டாக உள்ளதே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram

