அய்யனார் துணை
அய்யனார் துணை, வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்.
பெற்றோர்கள் துணை இல்லாமல் தனது கனவை நோக்கி பயணிக்க துடிக்கும் ஒரு பெண், அவருக்கு எதிர்ப்பாராத விதமாக திருமணம் நடக்கிறது. இதனால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறுகிறது.
இப்போது கதையில் சோழன் தன்னிடம் சொன்ன பொய் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார் நிலா, இதனால் வீட்டைவிட்டு வெளியேற நிலா முடிவு செய்ய அதுவும் நடக்காமல் போகிறது.

புரொமோ
சேரனை அவரது அத்தை மகள் கார்த்திகா விரும்புகிறார், அவருக்கு வீட்டில் திடீரென திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதனால் கார்த்திகா சேரனிடம் வந்து அழுது புலம்ப அது பெரிய பிரச்சனையாகிறது.
தற்போது இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோவில், கார்த்திகாவின் குடும்பத்தினர் தங்களது வீட்டுப் பெண்ணிடம் சேரன் தவறாக நடந்துகொண்டார் என போலீஸில் புகார் அளிக்கின்றனர்.
நிலா அப்படி ஒன்றும் நடக்கவில்லை, அந்த பெண்ணிடமே நீங்கள் விசாரியுங்கள் என போலீசாரிடம் போராடுகிறார். இதோ புரொமோ,

