தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டகர்ப்பிணியான தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது.
சப்ரீன் அல் சகானி என்ற அந்த பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ரபா மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை மூலம் மீட்கப்பட்டது.
கடும் போராட்டத்திற்கு பின்னரே மருத்துவர்களால்
கடும் போராட்டத்திற்கு பின்னரே மருத்துவர்களால் அந்த குழந்தை உயிருடன் காப்பாற்றப்பட்டது.
1.4 கிலோகிராம் மட்டுமே எடைகொண்ட குழந்தை, அவசரசிகிச்சைபிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
முல்லைத்தீவில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு!
சிகிச்சை பலனின்றி
குழந்தையை தந்தை வழி பாட்டி தத்தெடுத்துக் கொள்வதாக முன்வந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி சுமார் 4 நாட்களுக்கு பின்னர் குழந்தை உயிரிழந்த நிலையில், தாயின் சடலத்துக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமன்னிப்பின் கீழ் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிப்பு…!
இந்த தாக்குதலின்போது சப்ரீனின் தாய் ஏழரை மாத கர்ப்பிணியாக இருந்தார். இதன்போது அவரது கணவர் மற்றும் மூன்று வயது மகள் மலக்கும் கொல்லப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |