முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீடிக்கும் சீரற்ற காலநிலை! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேவையான நிதி 

மேலும்,  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணிகளை முதன்மைப்படுத்துங்கள்.

நிவாரணம் வழங்குவதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பணம் தேவைப்படுமாயின், அதற்கான நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்யுங்கள்  என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீடிக்கும் சீரற்ற காலநிலை! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | Bad Weather Sri Lanka

மேலும், இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணியை முதன்மைப்படுத்துமாறும், அதன் பின்னர், சேதமடைந்த சொத்துக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

நீடிக்கும் சீரற்ற காலநிலை! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | Bad Weather Sri Lanka

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் மேலும் பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

இவ்வருடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.