தீபாவளி வெளியீடாக கன்னடத்தில் வெளியாகியுள்ள Bagheera படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.
கதைக்களம்
சிறுவயதில் சூப்பர்ஹீரோவாக வேண்டும் என விரும்பும் வேதாந்த், அம்மா கொடுக்கும் விளக்கத்தைக் கேட்டு அப்பாவைப்போல் போலீசாக வேண்டும் என நினைக்கிறார்.
அவர் நினைத்தபடியே வளர்ந்ததும் டாப் ரேங்கிங்கில் தேர்வாகி மங்களூரு நகரின் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.
ஆனால் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அவரால் செயல்பட முடியவில்லை. ஒரு கட்டத்தில் முகமூடி அணிந்து போலீஸாக செய்ய முடியாததை செய்துமுடிக்க களமிறங்குகிறார் வேதாந்த்.
அதன் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
KGF இயக்குநர் பிரஷாந்த் நீல் கதையில் Dr.சூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
பிரபல நடிகர் ஸ்ரீமுரளி ‘Bagheera’வாக மிரட்டியுள்ளார். போலீஸ், Bagheera என்ற இரண்டு கதாபாத்திரமும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.
போலீஸாக இருந்தும் ரௌடிகளை ஒன்றும் செய்யமுடியவில்லையே என வருந்தும் இடத்திலும், தன் கண் முன்னே ஒரு உயிர் போகும்போது சட்டென மாறி கெட்ட போலீஸாக பேசும் இடத்திலும் ஸ்ரீமுரளி நடிப்பில் மிரள வைக்கிறார்.
தமிழில் வந்த கொடிபறக்குது, ஹீரோ படங்களில் வந்த கதைதான் என்றாலும் சுவாரஸ்யமான ஜெட் வேக திரைக்கதையில் மிரட்டியிருக்கிறது இப்படம்.
Bagheeraவாக வில்லன்களை ஸ்ரீமுரளி புரட்டியெடுத்தாலும், பிரகாஷ்ராஜின் என்ட்ரிக்கு பின் கதைக்களம் சூடுபிடிக்கிறது.
ஹீரோயின் ருக்மினி வசந்த் அவருக்கான கதாபாத்திரத்தை சரியாக செய்திருந்தாலும், அவரது முடிவு எதிர்பாராதது.
அச்சுத் குமார், ராமச்சந்திர ராவ் நன்றாக நடித்துள்ளனர். ஆனால் அவர்களை விட ரங்காயனா ரகு நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படம் முழுவதும் அதிர வைக்கிறது. அதேபோல் Chapter 1, 2 என KGF போலவே திரைக்கதை நகர்ந்தாலும் படத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது.
சேத்தன் டி சோஸாவின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக கடைசி இரண்டு சண்டைக்காட்சிகளும் அதகளம்.
கன்னடத்தில் Batman படத்தை பார்ப்பது போன்ற உணர்வை இப்படம் தந்திருக்கிறது.
கிளாப்ஸ்
சண்டைக்காட்சிகள்
விறுவிறுப்பான திரைக்கதை
ஹீரோ ஸ்ரீமுரளியின் நடிப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
இரண்டாம்பாதியில் வரும் ஒரு பாடல் காட்சி
மொத்தத்தில் அதிரடியான சூப்பர் ஹீரோ படம் பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இப்படத்தை கண்டு ரசிக்கலாம்.