அகண்டா 2
இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு (Boyapati Srinu) இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அகண்டா.

இது பாலகிருஷ்ணாவின் கம்பேக் படமாக அமைந்தது. அதிலிருந்து தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வருகிறார். அகண்டா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அகண்டா 2 பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன இயக்குநர் சிறுத்தை சிவா.. புகைப்படத்தை பாருங்க
தள்ளிப்போன அகண்டா 2
இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து சம்யுக்தா, ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளியாகவிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது.

விரைவில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அகண்டா 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

