2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடமைகள் உத்தியோக பூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தின் தேர்தல் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
321 வாக்களிக்கும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் பிரதான தேர்தல் நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து இன்று (05) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் மற்றும் அதிரடி படைகள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்களிக்க தகுதி
திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி சபைகளுக்கான 220 உறுப்பினர்களை
தெரிவுசெய்யும் தேர்தலாக இது அமைந்துள்ளது.

திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை
தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.
அந்தவகையில் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 106,105 பேரும், மூதூர் தேர்தல் தொகுதியில் 124,799 பேரும், சேருவில தேர்தல் தொகுதியில் 88,495 பேரும் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக 3,820அரச உத்தியோகத்தர்கள், 1,700 காவல்துறை உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
https://www.youtube.com/embed/Abgnwupy00k

