சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலின்போது நாடு முழுவதும் 15 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை தேர்தல் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிடம் தற்போது சுமார் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாக்குச் சீட்டு
மேலும், தேர்தலுக்கான வாக்குச் சீட்டு 26 அங்குல நீளம் கொண்டதாகவும் இது கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் நீளத்துக்கு இணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இம்முறை 39 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் ஒரு வேட்பாளர் மரணமடைந்துள்ள நிலையில் அவருடைய பெயரும் வாக்குச்சீட்டில் ஏற்கனவே அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.