பண்டாரவளை கிராமிய வைத்தியசாலையை தளமருத்துவமனையாக தரமுயர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான எல்ல பிரதேசத்துக்கு அண்மையில் போதுமான சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தரமுயர்த்தல்
அதன் பிரகாரம் பண்டாரவளை கிராமிய வைத்தியசாலையை தரமுயர்த்தல் தொடர்பான செயற்பாடுகள் தற்போதைக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊவா மாகாண சபையின் அதிகாரிகள் குழு இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பௌதீக வளங்கள் மேம்பாடு, நவீன உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் போதுமான நிதியொதுக்கீடு இல்லாத நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் பண்டாரவளை கிராமிய வைத்தியசாலையை தரமுயர்த்தும் செயற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.