பட்டலந்த வதை முகாம் இயங்கிய காலத்தில் இந்த நாட்டை நிர்வகித்திருந்த ரணில் விக்ரமசிங்க
போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் அந்த முகாம் உருவாக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றையதினம்(01.04.2025) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பட்டலந்த வதை முகாமை இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கறை படிந்த விடயமாகவே கருத முடியும்.
மனித உரிமை மீறல்கள்
அந்த
காலப்பகுதியில் இந்த நாட்டை நிர்வகித்திருந்த ரணில் விக்ரமசிங்க
போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்லந்த வதை முகாம்
உருவாக்கப்பட்டிருந்தது.

அதனூடாக பல இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையை இழந்தனர். அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.
அது தொடர்பான
விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது, அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனாலும் அதனை அடுத்த கட்டத்திற்கு சட்டரீதியான முறையில் எடுத்து செல்லாமல் கடந்த கால அரசாங்கம் தள்ளிப் போட்டிருந்தது” எனக் கூறியுள்ளார்.




