முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பட்டலந்த சித்திரவதைக் கூடம்…! சிக்கலில் ரணில் – சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை

இலங்கையில் இயங்கிய பட்டலந்த சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் (Premkumar Gunaratnam) குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அல் ஜசீராவுக்கு சமீபத்தில் வழங்கிய நேர்காணலையடுத்து, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீண்டும் பேசப்பட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழு

1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) அரசாங்கம், பட்டலந்த வீடமைப்பு தொகுதியில் இயங்கியதாகக் கூறப்படும் சித்திரவதைக் கூடம் தொடர்பில் விசாரிக்க ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தது.

பட்டலந்த சித்திரவதைக் கூடம்...! சிக்கலில் ரணில் - சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை | Batalanda Report Demand To Bring Ranil To Justice

மேலும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பட்டலந்தை சித்திரவதைக் கூடம்

இந்தநிலையில், 1988-89 வன்முறை காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக் குழுவில் உறுப்பினராக இருந்த, முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம், நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டலந்த சித்திரவதைக் கூடம் தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பட்டலந்த சித்திரவதைக் கூடம்...! சிக்கலில் ரணில் - சட்டத்தின் முன் நிறுத்த கோரிக்கை | Batalanda Report Demand To Bring Ranil To Justice

இதேவேளை ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்லாது இந்த சட்டவிரோத வதைக்கூடத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எனச் சகலரையும் சட்டத்தின் முன்னிறுத்தி, நீதியை நிலைநாட்டுவதற்கான பின்னணியொன்றை தற்போதைய அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/w_ZDIPFEug0https://www.youtube.com/embed/ib26h89PpbU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.