முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பட்டலந்த அறிக்கை…ரணிலின் கைது விவகாரம் : அடித்துக்கூறும் உதய கம்மன்பில

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்வதோ சாத்தியமற்றது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் 3ஆவது அத்தியாயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கிளர்ச்சிகள் குறித்துப் பேசுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி

அரசாங்கம் இந்த அறிக்கையை அமைச்சரவை அனுமதி ஊடாக ஏற்றுக்கொள்ளுமானால் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி இடம்பெற்றுள்ளது என்பதனை ஏற்பதாகும்.

பட்டலந்த அறிக்கை...ரணிலின் கைது விவகாரம் : அடித்துக்கூறும் உதய கம்மன்பில | Batalanda Report Issue Ranil Arrest Impossible

இந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதைய அமைச்சர் விஜயபால மெண்டிஸ் (Wijayapala Mendis) 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி பட்டலந்த அறிக்கையைச் சபையில் முன்வைத்தார்.

அவ்வாறு இல்லை எனப் பொய் கூறும் அரசாங்க தரப்பினர் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஹன்சாட்டின் ஆயிரத்து 581ஆவது பக்கத்தைப் பார்ப்பார்களானால் அதற்கான சாட்சியினை பெறமுடியும்.

திசைகாட்டியின் பொய் பிரசாரம்

ஆகவே, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ அல்லது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது.

பட்டலந்த அறிக்கை...ரணிலின் கைது விவகாரம் : அடித்துக்கூறும் உதய கம்மன்பில | Batalanda Report Issue Ranil Arrest Impossible

1948 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவுக்கே நீதிமன்ற அதிகாரம் காணப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவால் நபரொருவர் குற்றமிழைத்தாரா? இல்லையா? என்பதனை தீர்மானிக்க முடியும்.

அவ்வாறு எனில், திசைகாட்டியின் பொய் பிரசாரத்தில் புதிதாக ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையும் இணைந்துள்ளது” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/n-pFO_87CBs

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.