முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பட்டலந்த சித்திரவதை தொடர்பான ஆணைக்குழு கண்டுபிடித்த சில உண்மைகள்

1995 ஆம் ஆண்டு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்த சிறிது
காலத்திலேயே, செப்டம்பர் 21 ஆம் திகதியன்று, பட்டலந்த சித்திரவதைக்கூடச்
சம்பவங்களை விசாரிக்க விசாரணை ஆணையகத்தை அமைக்க உத்தரவிட்டார்.

பியகமவில் உள்ள பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் இளைஞர்கள் சட்டவிரோதமாக
தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்து கொலை செய்வது மற்றும் காணாமல்
போனமை குறித்து விசாரிக்கும் பணி இந்த ஆணையகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், 1988 மற்றும் 1990 க்கு இடையில் பட்டலந்த வீட்டுவசதித்
வளாகத்தில் நடந்த கொடும் நிகழ்வுகள் தொடர்பான ஆணையகத்தின் சில முக்கிய
கண்டுபிடிப்புக்கள் வெளியாகியுள்ளன.

பட்டலந்த வீட்டுவசதித் திட்டம்

1988 ஜனவரி 1, முதல் 1990 டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் பட்டலந்த
வீட்டுவசதித் வளாகத்தில் உள்ள பல வீடுகளில், பலர் சட்டவிரோதமாக தடுத்து
வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக ஆணையகத்தின் அறிக்கை கூறியுள்ளது.

பட்டலந்த சித்திரவதை தொடர்பான ஆணைக்குழு கண்டுபிடித்த சில உண்மைகள் | Batalanta Commission Report

அந்த நேரத்தில் இந்த வளாகம் அரச உர உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ்
இருந்தது. அத்துடன் அது தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இருந்தது.
இதன்போது, அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவி
வகித்தார்.

களனி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டலந்த வீட்டுவசதித்
திட்டத்தில் வீடுகளை ஒதுக்கி விடுவிக்குமாறு, அரச உர உற்பத்தி கூட்டுத்தாபன
அதிகாரிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியதாக ஆணையகத்தின்
கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதன்படி, வளாகத்தில் உள்ள யு 2ஃ2, யு 2ஃ1, யு 2ஃ3, யு 1ஃ7, டீ 2, டீ 1,
மற்றும் டீ 7 உள்ளிட்ட முக்கிய வீடுகள் இந்த அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக
ஒதுக்கப்பட்டன.

பேலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டக்ளஸ் பீரிஸ் தலைமையிலான பொலிஸ்
பிரிவினரால் இந்த வீடுகளில் பல பயன்படுத்தப்பட்டதை ஆணையகம் கண்டறிந்துள்ளது.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு

இதனை தவிர களனி நாசகார எதிர்ப்பு நடவடிக்கைப் பிரிவுக்கும் 13 வீடுகள்
ஒதுக்கப்பட்டன.
இந்த வீடுகளில் ஒன்று ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட அலுவலகமாகவும்
செயற்பட்டது.

பட்டலந்த சித்திரவதை தொடர்பான ஆணைக்குழு கண்டுபிடித்த சில உண்மைகள் | Batalanta Commission Report

இந்தநிலையில், பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் சட்டவிரோதமாக வீடுகளை
ஆக்கிரமிக்க வசதி செய்து கொடுத்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சர்
அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததாக ஆணையகம் கண்டறிந்துள்ளது
இந்த வீட்டு வசதிகளில் பணியாற்றிய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டக்ளஸ் பீரிஸ்,
தலைமை பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித் விக்ரமசிங்க, மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்
நளின் தெல்கொட உள்ளிட்ட 15 பொலிஸ் அதிகாரிகளை ஆணையகம் அடையாளம் கண்டுள்ளது.

பட்டலந்த வீட்டுவசதி வளாகத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு தொடர்ந்து
நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக துணை பொலிஸ் மா அதிபர் மெரில்
குணரத்னவையும் ஆணையகம் விமர்சித்துள்ளது.

இந்த வீடுகள் சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க மூத்த
பொலிஸ் கண்காணிப்பாளர் நளின் தெல்கொட, வேண்டுமென்றே தலையிடவில்லை என் ஆணையகம்
குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நபர்களுக்கு
நேரடியாகப் பொறுப்பான 13 அதிகாரிகளை ஆணையகம் அடையாளம் கண்டுள்ள நிலையில்
அவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டக்ளஸ் பீரிஸ்,

பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித் விக்ரமசிங்க,

பொலிஸ் சார்ஜென்ட் ரத்நாயக்க

பொலிஸ் சார்ஜென்ட் ரணதுங்க,

துணை பொலிஸ் ஆய்வாளர் தெல்கஹகொட ,

பொலிஸ் சார்ஜென்ட் உபாலி லக்கேவ,

பொலிஸ் கான்ஸ்டபிள் வாகன ஓட்டுநர் ரஞ்சித்,

பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயவர்தன,

பொலிஸ் கான்ஸ்டபிள் ஹீன்பண்டா,

பொலிஸ் சார்ஜென்ட் கப்பகொட,

பொலிஸ் கான்ஸ்டபிள் பத்மினி பிரேமலதா,

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ச்மன்,

பொலிஸ் கண்காணிப்பாளர் சுனில் பண்டார நிசங்க ஆகியோரே குறித்த 13 பேராகும்.

தடுப்பு மையங்கள்

இந்தக் காலகட்டத்தில் பட்டலந்த வீட்டுவசதி வளாகத்தில் நடைபெற்ற, பொலிஸ்
ஒன்றுகூடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பன பாதுகாப்பு அமைச்சினால்
வெளிப்படையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை ஆணையகத்தின் கண்டுபிடிப்புகள்
வெளிப்படுத்துகின்றன.

எனினும், அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தக்
கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும்
அவ்வாறு செய்ய அவருக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை.

ரணில் விக்ரமசிங்க, அரச உர உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் வளாகத்திற்குள் உள்ள
வீடுகளில், டீ2, டீ8, டீ34, மற்றும் யு1ஃ8 உள்ளிட்ட சட்டவிரோத தடுப்பு
மையங்களை அமைக்குமாறு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த சட்டவிரோத தடுப்பு மையங்களை அமைத்து நடத்தியவர்கள் உதவி பொலிஸ்
கண்காணிப்பாளர் டக்ளஸ் பீரிஸ் மற்றும் தலைமை பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித்
விக்ரமசிங்க ஆகியோர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
அங்கு பலர் சித்திரவதை செய்யப்பட்டு தவறாக நடத்தப்பட்டனர்.

அப்போதைய பொலிஸ் மா அதிபர் எர்னஸ்ட் பெரேரா, என்ன நடக்கிறது என்பதை சரியாக
அறிந்திருந்தார், ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்யும் தேர்வு அவரிடம்
இருக்கவில்லை என்று ஆணையகம் தெளிவாகக் கூறுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.