முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மக்களை தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருப்ப முயற்சி.. சாணக்கியன் பகிரங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக்கட்சி
முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையா விட்டால் அதன் மூலம் மக்களின் எதிர்ப்பு தமிழரசுக் கட்சிக்கு வரும்
என்ற வகையில் சிலர் செயற்பாடுகளை இன்றும் முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட
உறுப்பினர்கள், முதல்வர், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதி முதல்வர்
ஆகியோருக்கான இருநாள் செயலமர்வு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனியார்
விடுதியில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்த செயலமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று
ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நேற்று மாலை செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மக்களை தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருப்ப முயற்சி.. சாணக்கியன் பகிரங்கம் | Batticaloa Local Government Council

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு
சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “வடகிழக்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையே இவ்வாறான
செயலமர்வு ஒன்றிணை நடாத்தியிருக்கின்றது.

முக்கிய தீர்மானங்கள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு சபைகள், இலங்கை தமிழரசுக்கட்சி வசம்
இருக்கின்ற போது நாங்கள் மக்களுக்கான சேவையினை வழங்குவதில் இருந்து
தவறுவோமாக இருந்தால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் அதன் தாக்கத்தினை
நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை வரும்.
சில சபைகளில் அதிரடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மக்களை தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருப்ப முயற்சி.. சாணக்கியன் பகிரங்கம் | Batticaloa Local Government Council

அந்த தீர்மானங்கள் மக்கள்
சார்ந்தவையாக இருந்தாலும் எமது கட்சிக்கு எதிராக சமூகங்களுக்குள் இருக்கும்
சிலர் அதனை வைத்து சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதிலே எடுக்கப்பட்ட
சில தீர்மானங்களை பொதுமக்கள் வரவேற்கும் நிலையும் உள்ளது.
சபைகள் மூலம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு, வேலைத்திட்டங்களுக்கு மக்களின்
ஆதரவினை முதலில் திரட்ட வேண்டும்.

பிரதேச சபைகளில் எடுக்கும் தீர்மானங்களுக்கு
மக்கள் ஆதரவு இருக்குமானால் அந்த தீர்மானங்களினால் பாதிக்கப்படுபவர்களினால்
சபைக்கு எதிராக எதனையும் செய்ய முடியாத நிலை நாடாளுமன்ற ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.