தமிழ் சினிமா 2024
ஒவ்வொரு வருடத்தின் இறுதியில், திரையுலகில் சிறந்த விளங்கியவர்களை பட்டியல்கள் வெளிவரும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்கள் குறித்து பட்டியலை ஏற்கனவே பார்த்தோம்.
சிறந்த நடிகர்கள் 2024: நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தவர்களின் பட்டியல்
அதை தொடர்ந்து தற்போது 2024 ஆம் ஆண்டில் சிறந்த நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்த, நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாமா வாங்க.
சிறந்த நடிகைகள்
சாய் பல்லவி – ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த அமரன் படத்தில் தனது யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருந்தார்.
மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி – 2024ஆம் ஆண்டில் அனைவராலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தங்கலான் படத்தில், மாளவிகா மற்றும் பார்வதி இருவரின் நடிப்பும் மிரட்டலாக இருந்தது.
பிரியா பவானி ஷங்கர் – ராசி இல்லாத நடிகை என அனைவராலும் கிண்டல் செய்யப்பட்ட பிரியா பவானி ஷங்கர், டிமாண்டி காலனி மற்றும் பிளாக் படங்களின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார்.
துஷாரா விஜயன் – வேட்டையன் மற்றும் ராயன் படங்களில் தன்னுடைய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தனித்து நின்றார் துஷாரா.
ஸ்ரீ கௌரி ப்ரியா – மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி மூலம் பிரபலமான கௌரி ப்ரியா, லவ்வர் படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
சுவாசிகா மற்றும் சஞ்சனா – 2024ஆம் ஆண்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்று லப்பர் பந்து. இதில் ஹீரோங்களின் கதாபாத்திரங்களை விட, கதாநாயகிகள் சுவாசிகா மற்றும் சஞ்சனாவின் ரோல்கள் பாராட்டுகளை குவித்தது.
நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி – உண்மை சம்பத்தை வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை படத்தில், திவ்யா துரைசாமி மற்றும் நிகிலா விமலின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
ஷிவதா – சூரியின் கருடன் ஆக்ஷன் படமாக இருந்தாலும், அதில் தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்தார் ஷிவதா.
ஊர்வசி – நடிப்பு அரக்கி என திரையுலகில் செல்லமாக அழைக்கப்படும் ஊர்வசியின் சிறந்த நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை பெற்றது ஜே. பேபி.
தமன்னா – அரண்மனை 4ல் இதுவரை நாம் பார்த்திராத தமன்னாவை பார்க்கமுடிந்தது, பிள்ளைகளுக்காக உயிரை கொடுத்து போராடும் தாயாக நடித்து வரவேற்பை பெற்றார். படத்தில் இறுதியில், அவருக்கே உரித்தான நடனத்தில் ரசிகர்களை கவர்ந்தார்.
மஞ்சு வாரியர் – போராட்ட குணத்துடன் நடித்து விடுதலை 2ல் சிறந்த நாயகியாக வரவேற்பை பெற்றார் மஞ்சு வாரியர்.
வாணி போஜன் – அஞ்சாமை படத்தில் நீட் பரிச்சையால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் அநீதி, அதை எதிர்த்து போராடிய மாணவனின் தாயாக சிறப்பாக நடித்திருந்தார் வாணி போஜன்.
சாச்சனா – பிக் பாஸ் மூலம் பிரபலமாகி இருந்தாலும், 2024ல் சாச்சனாவிற்கு அடையாளத்தை தேடி கொடுத்தது மகாராஜா தான். விஜய் சேதுபதியின் மகளாக மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்ரன் – தனக்கு எந்தவிதமான கதாபத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பவர் சிம்ரன். அந்தகன் படத்தில் ஒரு கொலைகாரியாக நடித்து மிரட்டலாக திரையில் தன்னை காட்டி வரவேற்பை பெற்றார்.
அன்னா பென் – கொட்டுக்காளி படத்தில் வசனமே பேசாமல் ரசிகர்களின் கைதட்டல்களை தனக்கு சொந்தமாக்கினார் அன்னா பென்.