முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயற்கையாக காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா: நிரந்தரமான தீர்வு இதோ !

தற்போது ஆண் பெண் அனைவருக்குமே முடி கொட்டும் பிரச்சினை மற்றும் முடி தொடர்பான அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

முடி பராமரிப்பு இல்லாதது, உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மோசமான வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை சரியாக இல்லாவிட்டால், முடி உதிர்தல் எளிதில் குறைக்கப்படாது.

அதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனபதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகளை தான் பெற முடியும்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே, முடி வளர்ச்சிகான எண்ணெயை, வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த எண்ணெய் செய்ய தேவையான பொருட்களும், அதன் நன்மைகளும் மற்றும் எண்ணெய் செய்முறை குறித்தும் இங்கே விரிவாக காண்போம்.

கற்றாழை

இது முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களில் ஒன்றாகும். இந்த முடி ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கற்றாழை, முடி பராமரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையாக காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா: நிரந்தரமான தீர்வு இதோ ! | Best Homemade Hair Oil For Long And Thick Hair

இதனை நேரடியாக தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட புதிய ஜெல்லைப் பயன்படுத்தலாம் அல்லது வேறு சில இயற்கை பொருள்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.

குறிப்பாக, இதில் pH அளவு மிகக் குறைவாக இருப்பதால், இது உச்சந்தலைக்கு சிறந்ததாகும்.

மேலும் கற்றாழை ஜெல்லில் தாதுக்கள், தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. எனவே இது பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

கற்றாழையை முடிக்கு பயன்படுத்தும் முறை

  • முதலில் சில இயற்கை கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
  • இதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் நன்கு மசாஜ் செய்து கற்றாழை கலந்த ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
  • பிறகு ஒரு நல்ல கண்டிஷனரின் உதவியுடன் முடியைக் கழுவுவதன் மூலம் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

நெல்லிக்காய்

முடி சார்ந்த பராமரிப்பிற்கு உதவும் மிகவும் பிரபலமான தாவரங்களில் ஒன்றாக நெல்லிக்காய் அமைகிறது. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரமாகும்.

இயற்கையாக காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா: நிரந்தரமான தீர்வு இதோ ! | Best Homemade Hair Oil For Long And Thick Hair

தலைமுடிக்கு நெல்லிக்காயை எண்ணெய், ஷாம்பு அல்லது பச்சையாகப் பயன்படுத்தப்படலாம்.

மேலும், இது இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இது தவிர நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜன் புரதத்தை ஊக்குவித்து முடி வளர்ச்சியின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், இறந்த செல்களை வெளியேற்றி மயிர்க்கால்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது.

நெல்லிக்காயை முடிக்கு பயன்படுத்துவது எப்படி

  • தலைமுடிக்கு நெல்லிக்காய் சாற்றை உச்சந்தலையில் நேரடியாக பிழிந்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
  • இதை 10 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு நல்ல ஆம்லா ஷாம்பு கொண்டு கழுவி விடலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.