தங்கர் பச்சான் தமிழ் திரையுலகை சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் ஆவார். பன்முக திறமை கொண்ட இவர் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டையில் பிறந்தவர்.

யதார்த்தமான படைப்புகளை சினிமாவிற்கு தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் பற்றிதான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

Super Man திரை விமர்சனம்
அழகி:
தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் அழகி. இப்படம் 2002ல் வெளியானது. இத்திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பள்ளிக்கூடம்:
தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படங்களில் பள்ளிக்கூடம் படமும் ஒன்றாகும். இப்படத்தில் முக்கிய கதைப்பாத்திரங்களில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் ஆகியோருடன் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஒன்பது ரூபாய் நோட்டு:
சத்யராஜ், அர்ச்சனா, நாசர் மற்றும் ரோகினி ஆகியோர் இணைந்து நடிக்க தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு. இத்திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நூலின் திரைவடிவம் ஆகும். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.


அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ
அம்மாவின் கைபேசி:
தங்கர் பச்சான் இயக்கத்தில் கே. பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அம்மாவின் கைபேசி. இப்படத்தில் இனியா, ரேவதி, அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரோகித் குல்கர்னி இசையமைத்திருந்தார்.


