அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden)தனது பதவிக்காலத்தின் இறுதி நேரத்தில் வழங்கிய மன்னிப்புகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) ரத்து செய்து உத்தரவிட்டார். ‘அது டிஜிட்டல் முறை கையெழுத்தில் வழங்கப்பட்டது. அவருக்கு எதுவும் தெரியாது’ என ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
இன்றையதினம்(17) ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது.
ஜோ பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது. அது டிஜிட்டல் முறை கையெழுத்தில் வழங்கப்பட்டது. அவருக்கு எதுவும் தெரியாது. மன்னிப்பு வழங்கியது குறித்து பைடனுக்கு விளக்கப்படவில்லை.
அது அங்கீகரிக்கப் படவில்லை. அவருக்கு அவற்றைப் பற்றி எதுவும் தெரியாது. உண்மை என்னவென்றால், நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பைடனின் ஒப்புதல் இல்லாமல், அதிகாரிகள் சார்பாக கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை ரத்து செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய பைடன்
இதேவேளை சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை,அது தொடர்பில் போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில்ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.எனினும் கடைசி நேரத்தில், தனது மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் ஜோ பைடன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.