பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.
போட்டியாளர்கள் நடுவில் பல்வேறு டாஸ்குகள் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு வந்தது.
ஜெயித்தது யார்
நடந்து முடிந்த டாஸ்குகள் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று ரயான் டிக்கெட் டு ஃபினாலே ஜெயித்து இருக்கிறார்.
இதன் மூலமாக அவர் பைனலில் முதல் ஆளாக நுழைந்து இருக்கிறார்.
இதற்கு முந்தைய சீசன்களில் Ticket to finale ஜெயித்தவர்கள் யாரும் டைட்டில் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.