பிக் பாஸ் ஷோ என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு சர்ச்சையான பிரபலங்களை தான் போட்டியாளர்களாக தேர்வு செய்து வீட்டுக்குள் அனுப்புகிறார்கள்.
வாய்த்தகராறு தொடங்கி அடிதடி சண்டை வரை நடக்கும். பிரபலமான நடிகர்கள் தொடங்கி, மாடலிங் செய்யும் புதுமுகங்கள் வரை பலரும் போட்டியாளராக வந்து பார்த்திருப்போம்.

தெலுங்கு பிக் பாஸில் மாற்றம்
இந்நிலையில் விரைவில் தெலுங்கில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளராக பொதுமக்களும் வரலாம் என அறிவிப்பு வந்திருக்கிறது. அதற்கு விண்ணப்பிக்க இணையத்தளம் திறந்து இருக்கின்றனர்.
அதில் தங்களது வீடியோ உடன் மக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளனர். இந்த வருடமும் நாகார்ஜூனா தான் ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார்.
தெலுங்கை போலவே அடுத்து தமிழில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 9ம் சீசனில் இதே நடைமுறை வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
View this post on Instagram

