விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் முதல் வாரத்தில் ஷோ தொடங்க இருப்பதாக தகவல் வந்திருக்கும் நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என உத்தேச லிஸ்ட் வந்துகொண்டிருக்கிறது.
விஜய் டிவி பிரபலங்கள் பலரது பெயர்களும் இந்த லிஸ்டில் இருந்து வருகிறது.

CWC பிரபலம்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் உமர் லத்தீப் பிக் பாஸ் வர இருப்பதாக கூறப்படுகிறது.
அமரன் படம் மூலம் பிரபலம் ஆன அவர் குக் வித் கோமாளியில் முக்கிய போட்டியாளராக இருந்தார். சமீபத்தில் தான் ஷோவில் இருந்து அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸுக்காக தான் அவர் CWCயில் இருந்து எலிமினேட் செய்தார்களா என நெட்டிசன்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.


