விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ராஜு. அதற்கு முன் சீரியல்களில் நடித்ததன் மூலம் கிடைத்த புகழை விட பிக் பாஸ் அவரை உச்சிக்கே கொண்டு சென்றது.
பிக் பாஸுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் டான் உட்பட சில படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து இருந்தார் ராஜு.


சின்ன கவுண்டர் படத்தை காப்பி அடித்த விஜய் டிவி சீரியல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
ஹீரோ
தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக ராஜு வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜனநாயகன் பட இயக்குனர் ஹெச்.வினோத் தயாரிக்கப்போகும் ஒரு சின்ன பட்ஜெட் படத்தில் தான் ராஜு ஹீரோவாக நடிக்க போகிறாராம்.
குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா இந்த படத்தை இயக்க போகிறார்.


