பிக்பாஸ் 8
விஜய் டிவியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 100 நாட்களை எட்ட இருக்கும் நிலையில் முடிவுக்கும் வரப்போகிறது.
எல்லோரும் எதிர்ப்பார்த்த Freeze Task முடிவுக்கு வந்துவிட்டது, இந்த வாரத்தில் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்து வருகிறார்கள். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் என்ட்ரி கொடுக்கும் புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அர்னவ்
தற்போது பிக்பாஸ் 8 வீட்டிற்குள் அர்னவ் என்ட்ரி கொடுக்கும் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் அவர் போட்டியாளர்களை பார்த்து பேசிய விஷயம் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்த அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் அர்னவ் அவர்கள் அனைவருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.