பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தமிழ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் FJ மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இதில் ஆதிரை இரண்டாவது முறையாக வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மூன்று நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் 9 தெலுங்கு
பிக் பாஸ் 9 தமிழ் ஆரம்பம் ஆவதற்கு முன்பே பிக் பாஸ் 9 தெலுங்கு தொடங்கிவிட்டது. நாகர்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

23 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த பிக் பாஸ் 9 தெலுங்கு நேற்று பைனல் போட்டி நடைபெற்றது. இதில் சஞ்சனா கல்ராணி, இம்மானுவேல், டீமன் பவன், கல்யாண் படலா மற்றும் தனுஜா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு வந்தனர்.
இந்த ஐவரில் இருந்து மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற கல்யாண் படலா பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். இவருக்கு ரூ. 35 லட்சம் பரிசு தொகையுடன் சேர்த்து மாருதி சுசுகி விக்டோரிஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வென்ற கல்யாண் படலாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

